Wednesday 3 July 2013

நோக்கியா ஆஷா 501 இன்று இந்தியாவில் அறிமுகம்



புதுடெல்லியில் இன்று நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கியா ஆஷா 501 மொபைல் மாடலை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விழாவில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் கலந்துக்கொண்டு ஆஷா 501 மொபைலை அறிமுகப்படுத்தினார். இதில் பேசிய அவர், ஆஷா போன் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக பேஸ்புக்குடன் நோக்கியா நிறுவனம் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்று கூறினார். மேலும் ஏர்டெல்லில் இலவசமாக பேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

நோக்கியா ஆஷா 501ன் சிறப்பம்சங்கள்:

* ஆஷா 501, 3 இன்ச் திரையுடன், 320x240 பிக்ஸல் நுணுக்கம் மற்றும் முழுவதும் தொடு திரை வசதிகளைக் கொண்டுள்ளது.

* 3.2 மெகாபிக்சல் கொண்ட கேமரா இருக்கிறது.

* இரண்டு சிம்கார்டு மற்றும் ஒற்றை சிம்கார்டு வசதியும் உள்ளது.

* இந்த ஸ்மார்ட்ஃபோனில் 17 மணி நேர டாக்டைம் வசதி உள்ளது.

* ஆஷா 501 மொபைல் போன் 2G and WiFi, Bluetooth 3.0. ஆகியவற்றிற்கும் சப்போர்ட் செய்கிறது.

* இதில் 4GB யிலிருந்து 32GB மெமரி கார்ட் மற்றும் 64 MB RAM வசதியும் உள்ளது.

* இதில் சிவப்பு, பச்சை, சியான், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களும் உள்ளன.

* இதில் முன் கூட்டியே நிறுவப்பட்ட பயன்பாடுகளான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவையும் உள்ளன. மேலும், ஆஷா போன் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக பேஸ்புக்குடன் நோக்கியா நிறுவனம் பார்ட்னர்ஷிப் வைத்திருப்பதால் படங்களை நேரடியாக பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளலாம். இத்துடன் Nokia Xpress Browserம் உள்ளது.

* இந்த ஸ்மார்ட்ஃபோன் இந்திய மொழிகளான ஹிந்தி, மலையாளம், தமிழ் என பல்வேறு மொழிகளிலும் கீபோர்டு இருக்கிறது. வரும் ஜூனில் மார்க்கெட்டில் ரூ. 5,347 என்ற விலையில் களமிறங்க இருக்கிறது இந்த நோக்கியா ஆஷா 501 மாடல் ஃபோன்.


பேஸ்புக்குடன் பார்ட்னர்ஷிப் வைத்திருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த நோக்கியா ஆஷா 501 இருக்கும் என்றும் நோக்கியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் நம்பிக்கைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment