Tuesday 2 July 2013

மூன்று நாளில் திட்டம் துவக்கம் பி.எப் பணத்தை பெற ஆன்லைனில் விண்ணப்பம்




புதுடெல்லி : வருங்கால வைப்பு நிதியை(பி.எப்) பணத்தை பெறுவதற்கும், வேறு கணக்குக்கு மாற்றுவதற்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் 3 அல்லது 4ம் தேதி துவக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 5 கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையராக சமீபத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட கே.கே.ஜலான் கூறுகையில், Ôபி.எப் பணத்தை பெறவும், வேறு கணக்குக்கு மாற்றவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் ஜூலை 3 அல்லது 4ம் தேதி தொடங்கப்படும்Õ என்றார். இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலாவுடன் அவர் இன்று ஆலோசிக்க உள்ளார்.

நடப்பு நிதியாண்டில் 1.2 கோடி விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 11 கணக்குப்படி 5 லட்சத்து 38,704 விண்ணப்பங்கள் ஏற்கனவே இருப்பில் உள்ளன. இவற்றில் பெரும் பகுதி விண்ணப்பங்களின் மீது 3 நாட்களில் தீர்வுகாண வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மண்டல தலைவர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 5ம் தேதி கூட்டப்படுகிறது.


பி.எப் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அலுவலகத்தை இபிஎப்ஓ அமைக்கிறது. இது பி.எப் பணத்தை ஆன்லைன் மூலம் பெறவும், மாற்றவும் விண்ணப்பிக்க உதவும். ''தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாறும்போது பி.எப் கணக்கை மாற்றுவது சிரமமாக உள்ளது. ஆன்லைன் திட்டத்தில் இதற்கு தீர்வு காண முடியும்'' என்று தொழிற்சங்க தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே, சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு நிலவரத்தை ஆன்லைன் மூலம் சரிபார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச வங்கியிடம் வாங்கிய ரூ6,000 கோடி கடனை அடைத்தது ரிலையன்ஸ்



புதுடெல்லி: கடந்த 2007ம் ஆண்டு, சர்வதேச வங்கிகளிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ6,000 கோடி) கடனாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெற்றது. இந்நிலையில், ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்த கடன் முழுவதையும் திரும்ப செலுத்திவிட்டதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதுதவிர சில வங்கிகளிடம் இருந்து வெளிநாட்டு கரன்சிகள் அடிப்படையில் பெறப்பட்ட ரூ1,200 கோடி கடனையும் விரைவில் செலுத்துவதற்கான அட்டவணையை தயாரித்துள்ளதாகவும், இந்த கடன் தொகை முழுவதும், நிறுவனத்தின் ரூபாய் ஆதாரத்தில் இருந்து செலுத்தப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, அதன் பங்குகள் விலை 5.50 சதவீதம் உயர்ந்து ரூ124.60 ஆக உயர்ந்தது.

பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் அதிகரிப்பு : லிட்டருக்கு 61 காசு உயர்வு


புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து, டீசல் விலையும் நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வரியுடன் லிட்டருக்கு 61 காசு உயர்ந்து, ஸி54.15க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே 15 நாளைக்கு ஒரு முறை நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் விலை கடந்த மாதத்தில் மட்டும் 3 முறை (ஜூன் 1, 16, 29ம் தேதி) உயர்த்தப்பட்டது. கடைசியாக, கடந்த 29ம் தேதி லிட்டருக்கு ஸி2 உயர்த்தப்பட்டது. இதேபோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலையை எட்டும் வரை லிட்டருக்கு 50 காசு வீதம் 15 நாளைக்கு ஒரு முறை உயர்த்திக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி, மே 31ம் தேதியும் ஜூன் 1ம் தேதியும் தலா 50 காசு உயர்த்தப்பட்டது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு, கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. இதனால் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக அவை தெரிவித்தன. எனினும், கடந்த 29ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோதும், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், திடீரென நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வரிகள் சேர்த்து ஒரு லிட்டருக்கு 61 காசு உயர்ந்து, ஸி54.15க்கு விற்பனையாகிறது. விலை உயர்வுக்கு பின்னரும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.8.10 நஷ்டம் ஏற்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தோனியின் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா கோலியால்!?




மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வி தழுவியதையடுத்து இந்தப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்தியா தரப்பில் மிகப்பெரிய பின்னடைவு தோனி இந்தத் தொடரில் இனி விளையாட முடியாமல் போனதே. கோலியின் கேப்டன்சி எதிர்பார்ப்புகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகும் இந்தப் போட்டி.

பாகிஸ்தானை இந்தியா பல்வேறு காரணங்களுக்காக கழட்டி விட்ட நிலையில் அதிகம் இலங்கையுடன் இந்தியா விளையாடியுள்ளது கடந்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளும் தங்களுக்கிடையே 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியாவுக்கே வெற்றி அதிகம். ஏதோ ஒரு விதத்தில் தோனி வந்தபிறகே இலங்கையால் இந்தியாவுக்கு எதிராக சோபிக்க முடியவில்லை. மேலும் அவர்களது சிறந்த பவுலர் லஷித் மலிங்கா இந்தியாவுக்கு எதிராக சரியாக வீச முடியவில்லை. இந்திய பேட்ஸ்மென்களுக்கு அவரது கையும் பந்து வீச்சும் பழகிவிட்டது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.


தோனிக்கு பதிலாக அம்பாட்டி ராயுடு வந்துள்ளார். ஆனால் அவரை உடனடியாக அணியில் சேர்ப்பார்களா இல்லை முரளி விஜையை அணியில் சேர்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.