Saturday 22 June 2013

சாம்சங் காலக்ஸி மினி எஸ் 4 வெளியாகிறது











சாம்சங் நிறுவனத்தின் நவீன காலக்ஸி எஸ் 4 மொபைல் போனை ஆசையுடன் பார்த்து, பின் விலை அதிகம் என்பதால், விட்டுவிட்டுச் சென்றவர்களுக்காக, சாம்சங் நிறுவனம் அதன் மினி மாடல் ஒன்றை வெளியிடுகிறது. இதன் அம்சங்களாவன: 4.3 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே திரை (960 × 540 பிக்ஸெல்கள்) 1.7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம், டூயல் சிம் (விருப்பத்தின் பேரில்) 8 எம்.பி. பின்புறக் கேமரா, எல்..டி.ப்ளாஷ் இணைந்து 1.9 எம்.பி. முன்புறக் கேமரா, தடிமன் 8.94 மிமீ, எடை 107 கிராம், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 1.5 ஜிபி ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை உயர்த்தும் வசதி, 4ஜி, 3ஜி, வைபி, புளுடூத் 4.0, என்.எப்.சி. 1900 mAh திறன் கொண்ட பேட்டரி வழக்கம் போல ஒயிட் ப்ராஸ்ட் மற்றும் ப்ளாக் மிஸ்ட் வண்ணங்களில் இவை கிடைக்கும்.

CUTE BIRDS


வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு!



டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ரூ.60 எனும் உச்ச நிலை சரிவை சந்தித்து இருக்கிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்தவாரம் முதலே கடும் சரிவை சந்தித்து வருகிறது. சென்றவாரம் ரூ.58.96 எனும் உச்சநிலை சரிவை சந்தித்த நிலையில் தொடர்ந்து இந்தவாரம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வந்தது.

இந்நிலையில் இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சநிலை சரிவை சந்தித்துள்ளது, காலை வர்த்தக நேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1.30 காசுகள் சரிந்து ரூ.60- தொட்டது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பங்குசந்தைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 526 புள்ளிகள் குறைந்து 18,719 புள்ளிகளில் நிறைவடைந்துள்
நெய்வேலி நிறுவன பங்கு விற்பனைக்கு பாரதீய மஸ்தூர் சங்கம் கண்டனம்


22 June 2013 
நெய்வேலி நிறுவனத்தின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை  செய்யும் அரசின் முடிவுக்கு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் அகிலபாரத செயலாளர் எஸ்.துரைராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 10 ஆண்டுகளாக அதிக லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்வதை நாட்டின் மிகப் பெரும் தொழிற்சங்கமாகிய பாரதீய மஸ்தூர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அந்நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் பல ஆயிரம் கோடிகளில் விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும்போது, பங்குகளை விற்று என்.பி..வில் முதலீடு செய்வது, பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பாகும் என்று கூறியுள்ளார். இதனை மத்திய அரசு உடனே கைவிடாவிட்டால், என்.எல்.சி. மஸ்தூர் சங்கம் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து கடுமையான போராட்டங்களையும் நடத்திட தயங்காது என்றும் கூறியுள்ளார்.