Sunday 16 June 2013















தென்காசி, ஜுன் 16-

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் தற்போது களை கட்டியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்த்து அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர். தற்போது அவர்களுக்கு கூடுதல் பொழுது போக்கு அம்சமாக படகு சவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் பெருகிவிட்டதையடுத்து அங்கு படகு சவாரி நேற்று தொடங்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் படகு சவாரியை தொடங்கி வைத்தார். எம்.எல்..க்கள் சரத்குமார், நாராயணன், வீட்டு வசதி வாரியத்தலைவர் முருகையாபாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


குற்றாலத்தில் படகுசவாரி தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
















நெல்லை, ஜூன். 12-

தென்காசி அருகே உள்ள நயினாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 19). இவர் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இவர் ஐஸ்களை 'பிரீசர் பாக்ஸ்'-ல் வைத்து குளிரூட்டினார்.

சிறிது நேரம் கழித்து பிரீசர் பாக்சை திறந்தபோது எதிர்பாராதவிதமாக முத்துகுமார் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துகுமார் பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.