Tuesday 2 July 2013

மூன்று நாளில் திட்டம் துவக்கம் பி.எப் பணத்தை பெற ஆன்லைனில் விண்ணப்பம்




புதுடெல்லி : வருங்கால வைப்பு நிதியை(பி.எப்) பணத்தை பெறுவதற்கும், வேறு கணக்குக்கு மாற்றுவதற்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் 3 அல்லது 4ம் தேதி துவக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 5 கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையராக சமீபத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட கே.கே.ஜலான் கூறுகையில், Ôபி.எப் பணத்தை பெறவும், வேறு கணக்குக்கு மாற்றவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் ஜூலை 3 அல்லது 4ம் தேதி தொடங்கப்படும்Õ என்றார். இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலாவுடன் அவர் இன்று ஆலோசிக்க உள்ளார்.

நடப்பு நிதியாண்டில் 1.2 கோடி விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 11 கணக்குப்படி 5 லட்சத்து 38,704 விண்ணப்பங்கள் ஏற்கனவே இருப்பில் உள்ளன. இவற்றில் பெரும் பகுதி விண்ணப்பங்களின் மீது 3 நாட்களில் தீர்வுகாண வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மண்டல தலைவர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 5ம் தேதி கூட்டப்படுகிறது.


பி.எப் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அலுவலகத்தை இபிஎப்ஓ அமைக்கிறது. இது பி.எப் பணத்தை ஆன்லைன் மூலம் பெறவும், மாற்றவும் விண்ணப்பிக்க உதவும். ''தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாறும்போது பி.எப் கணக்கை மாற்றுவது சிரமமாக உள்ளது. ஆன்லைன் திட்டத்தில் இதற்கு தீர்வு காண முடியும்'' என்று தொழிற்சங்க தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே, சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு நிலவரத்தை ஆன்லைன் மூலம் சரிபார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment