Saturday 6 July 2013

நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 24ஆம் தேதி ஆட்கள் தேர்வு



வள்ளியூர், : கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்பாட்டம் நடந் தது. பஸ் நிலையம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் வேம்பு தலைமை வகித்தார். சேதுராமலிங்கம், கலையர சன¢, இசக¢கியப்பன், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மணியன், முத்து, சத்தியன், சந்தன முத்து, ஆகியோர் பேசினர். மீனாட்சி சுந்தரம், அன்னலட்சுமி, நயினார், இசக¢கிமுத்து, ராஜதுரை, கணேசன், நம்பி, முத்தையா, கிருஷ்ணமூர்த்தி உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

   கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்திந்கு தண்ணீர் திறக்க வேண்டும், என்.எல்சி பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடந்தது.

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்



பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.


அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

வருகிறது குறைந்த விலை ஐபோன்கள் நடுத்தர மக்களும் வாங்கலாம் ஐபோன்




இந்தியாவில் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பெரும்பான்மையாக உபயோகிப்பது நோக்கியா, சாம்சங், மற்றும் சீன ரக மொபைல் போன்கள்தான். தற்போது இந்தியாவில் ஐபோன் (ஆப்பிள்) நிறுவனம், தன் வியாபாரத்தை விரிவுபடுத்த விலை குறைந்த ஐபோன்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுஇந்தியாவில் ஐபோன்கள், அதிக விலை கொண்டவையாக உள்ளதால், நடுத்தர மக்களிடையே ஐபோன்களை வாங்கும் ஆர்வம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனம், குறைந்த விலை ஐபோன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை சீன ரக மொபைல் போன்களின் விலை அளவுக்கே இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் ஐபோன்களின் பயன்பாடு அதிகரிக்க கூடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு அனுமதி சென்னை ஏர்போர்ட் தனியார்மயம்

 புதுடெல்லி: சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை தனியார்மயப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் 15 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மும்பை, டெல்லி விமான நிலையங்களின் பழைய முனையங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) நிர்வகிக்கிறது. இதன் அடுத்தகட்டமாக சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களின் பழைய முனையங்கள் தனியார்மயமாக்க, அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவ்விரு விமான நிலையங்களிலும் உள்ள புதிய முனையங்கள், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தொகைக்கு, தனியார் நிறுவனங்களுக்கு லீசுக்கு அளிக்கப்படும்.

ஹீரோ மோட்டார்சைக்கிள் கென்யாவில் விற்பனை




புதுடெல்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கென்யாவில் இரு சக்கர வாகன விற்பனையை தொடங்குவதன் மூலம் ஆப்ரிக்கா கண்டத்தில் அடியெடுத்து வைக்கிறது. பர்னிகா பாஸ்கோ, ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளிலும் அடுத்த வாரம் முதல் தனது செயல்பாடுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. கென்யாவில் ரைசி ஈஸ்ட் ஆப்ரிக்கா என்ற நிறுவனத்துடன் ஹீரோ நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. ரைசி ஈஸ்ட் ஆப்ரிக்கா நிறுவனத்தின் அங்கமான சமீர் குரூப் நிறுவனம் ஹீரோவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முன்ஜால் கூறுகையில், கென்யாவில் முதன்முதலில் விற்பனையை தொடங்குவதன் மூலம் ஆப்ரிக்க கண்டத்தில் அடியெடு த்து வைக்கிறோம். குறைந்த விலை டான் வாகனம் முதல் உயர் ரகமான கரீஸ்மா வரை அனைத்து மாடல் களையும் அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார்.

வெஸ்ட் இண்டீசை சுருட்டி வீசியது : 102 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி


3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா&வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. கோஹ்லி 83 பந்தில் 2 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன் விளாசினார். ரோகித் ஷர்மா 46, ஷிகார் தவான் 69, ரெய்னா 10, தினேஷ் கார்த்திக் 6, முரளி விஜய் 27, ஜடேஜா 2, அஸ்வின் 25 ரன் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டினோ பெஸ்ட் 2, ரோச், பிராவோ, சாமுவேல்ஸ், பொல்லார்டு தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்தது. கெய்ல் 10, பிராவோ 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. 39 ஓவர்களில் 274 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. சாமுவேல்ஸ் 6, பொல்லார்டு 0, வெயின் பிரவாவோ 14, சார்லஸ் 45, ரம்தின் 9, சம்மி 12, ரோச் 34, நரேன் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல்&அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் தலா 3, ஜடேஜா, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் இந்திய அணி இறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 9ந்தேதி இலங்கையை எதிர்த்து ஆடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.