Wednesday 26 June 2013



தாஜ் மகால் 










(Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Main falls in Courtallam is experienced full flow on Saturday.


சிறு ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குசந்தைகள்

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜூன் 26ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் சிறிய ஏற்றத்துடன் துவங்கி இருக்கின்றன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 13.28 புள்ளிகள் உயர்ந்து 18,642.43 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 5,620.10 எனும் அளவிலும் இருந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்குவது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கின்றன.
தென்காசியில் போக்குவரத்து நெருக்கடி; வாகனங்கள் தத்தளிப்பு

தென்காசி : தென்காசி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் தத்தளித்து செல்கின்றன. வாகன நெருக்கடியை போக்க மாற்று வழியை செயல்படுத்தவும், கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,. குற்றாலத்தில் தற்போது சீசன் தெடங்கி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் இங்கு வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. குற்றாலத்திற்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தென்காசி வந்தே செல்கின்றனர். குற்றாலத்தில் உள்ள பெரும்பாலான லாட்ஜ்கள் புக் ஆகி விட்டதால் பலர் தென்காசி லாட்ஜ்களில் தங்குகின்றனர். இதனால் தென்காசி பகுதிக்கு வரும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே தென்காசி பகுதியில் மேம்பால பணி நடைபெறுவதால் தென்காசி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி கடுமையாக காணப்பட்டது. தற்போது வாகனங்களில் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ள காரணத்தால் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. மேலும் தென்காசி நகர் பகுதிக்குள் கனரக வாகனங்கள் அதிகமாக வருவதால் ரோடுகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் ரோட்டில் சேதமடைந்துள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் குழிகளை கவனிக்காமல் சென்று விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்காசியில் பெரும்பாலன இடங்களில் வாறுகாலில் கழிவுகளை சரியாக அள்ளப்படாமல் இருப்பதனால் கழிவுகள் ரோட்டிற்கு வந்து மழை நீருடன் கலந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வாகன நெருக்கடியை போக்க குற்றாலத்தில் இருந்து மதுரை வழியாக வெளியூர் செல்லும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் இருந்து இலஞ்சி, குத்துகல்வலசை வழியாக செல்வதற்கான நடவடிக்கைகளையும் அதற்கான விளக்க பலகையினையும் குற்றாலத்தில் வைக்க வேண்டும், மேலும் தென்காசி ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வழியான இணைப்பு சாலையில் தற்போது பஸ்கள் மற்றும் லாரிகள் செல்வதனால் அந்த ரோடு மிகவும் சேதமடைந்து உள்ளது இதை சரி செய்வது மட்டுமல்லாது அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லாமல் நடவடிக்கை எடுக்கவும், வாகன நெருக்கடி அதிகம் ஏற்படும் இடங்களான, பழைய பஸ் ஸ்டாண்ட், நடு பல்க், ரயில்வே கேட், போஸ்ட் ஆபிஸ், தங்கபாண்டியன் சிக்னல், பழைய ஆஸ்பத்திரி, வாய்க்கால் பாலம் ஆகிய பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கவும், பிசியான நேரங்களில் தென்காசி நகர் பகுதிக்குள் கனரக வாகனங்கள் நுழைய விடாமல் தடுக்கவும சம்மந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தென்காசி நகர பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.