Saturday 20 July 2013

சுத்தம் வேண்டும் நித்தம்!



குளிக்கும் பழக்கம்

நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால்  மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து  நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக  வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக்  குளிக்கவைக்கவும்.

கை சுத்தம்

சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப்  பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு  குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத்  தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற  இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.

பல் சுத்தம்

சொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக்கொடுக்காததே இதற்குக்  காரணம். தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப்  பெரிய சவால்தான். பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி  அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என  எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.

காயங்களை மூட வேண்டும்

காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும்இதைத்  தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள்  மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத்  தெரிவிக்கும்படி குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்

தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்


தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை  தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில்  தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால்  மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல்  போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் 'பின்செய்து அனுப்புவது  நல்லது.

Windows XP இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தல் செய்யுமாறு அறிவுறுத்தல்



கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் இயக்க அமைப்பில் பிரபலமான 'விண்டோ எக்ஸ்பி' பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், Windows XP மென்பொருள்களுக்கு எதிராக ஹேக்கிங் முயற்சிகள் ஊடுருவதால் 'உடனடியாக' மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனமும் Windows XP-க்கான உதவிகளை  அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி¬õ‚èŠð´‹. இதனால் Windows XP-க்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும்

இதனையடுத்து Windows XP இயங்குதளத்தை பயன்படுத்தும் அனைத்து பயனர்களையும் மற்றும் நிறுவனங்களையும் உடனடியாக ஏப்ரல், 2014 முன் அவர்களின் மென்பொருள் பயன்பாடுகள் இயக்க மேம்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. மைக்ரோசாப்ட் ஆரம்பத்தில் 2001 ல் Windows XP இயங்குதளத்தை வெளியிடப்பட்டது. தற்போதைய வெளியீட்டில் Windows XP பதிப்பு Windows XP சேவை பேக் 3 அழைக்கப்படுகிறது. பின்னர், மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களுக்காக அடுத்த மூன்று பதிப்புகளான 8 நவம்பர் 2006 ல் Windows Vista, ஜூலை 2009 ல் Windows 7 மற்றும் ஆகஸ்ட் 2012 ல் Windows 8 வெளியிட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக Windows 8 கருதப்படுகிறது.