Saturday 13 July 2013

பஜாஜின் புதிய டிஸ்கவர் 125-டி


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125 சிசி ரக வாகனத்தில் புதிய 125-டி மோட்டார் சைக்கிளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் அஸ்வின் ஜெய்காந்த் கூறியது: பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிள்கள் மிகவும் வெற்றிகரமாக விற்பனை ஆகி, எக்ஸிகியூடிவ் ரக பைக் சந்தையில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் 4.5 லட்சம் டிஸ்கவர் ரக பைக்குகளை விற்பனை செய்துள்ளோம்.


இப்போது, 125 சிசி ரக வாகனங்களில் புதிய அணிவகுப்பாக டிஸ்கவர் 125-டி என்ற மாடலை அறிமுகம் செய்கிறோம். டிஸ்கவர் 100-டி மற்றும் 125-எஸ்டி ரக மோட்டார் சைக்கிள்களுக்கு இடைப்பட்ட மாடலாக புதிய பைக் இருக்கும். சென்னை விற்பனையக விலை ரூ. 54,022 முதல். நான்கு வண்ணங்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன என்றார்.