Thursday 4 July 2013

ரூபாய் மதிப்பு 55 காசு வீழ்ச்சி


மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று ஒரே நாளில் 55 காசு சரிந்து, 60.21 ஆனது வங்கிகள், இறக்குமதியாளர்களுக்கு அதிக டாலர்கள் தேவைப்படுவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு சரிந்து வருவது போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு கடந்த வாரம் வீழ்ச்சி அடைந் தது. கடந்த 26ம் தேதியன்று இது வரை இல்லாத அளவாக, ஒரு அமெரிக்க டாலர் ரூ.60.73 என்ற அளவில் சரிவடைந்தது.

அதன்பின், ரிசர்வ் வங்கி தலையீட்டால் சரிவில் இருந்து மீண்டும் ரூ.59 ஆக உயர்ந்ததுஇந்நிலையில், நேற்று காலையில் ரூபாய் மதிப்பு 59.66ல் இருந்து, இறுதியில் 55 காசு சரிந்து 60.21 ஆனது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.