Wednesday 3 July 2013

இளைஞர்களுக்கு எச்சரிக்கை டாடா, ரிலையன்ஸ் பெயரில் வேலைவாய்ப்பு மோசடி


புதுடெல்லி : கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்களிடம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்த சில தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வீழ்ந்துவிட்ட நிலையில், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தியுள்ளன.

டாடா குழும நிறுவனங்களில் அதிகபட்சமாக 4,50,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் 23,519 பேர் நிரந்தரமாகவும், 29,462 பேர் தற்காலிகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மோசடி வேலைவாய்ப்பு நிறுவனங்கள், டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்களை பணியில் நியமிப்பதற்கான ஆணையை தாங்கள் பெற்றுள்ளோம் என்றும், இப்பணியில் சேர வங்கியில் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் அவர்களிடம் பணத்தை கட்டி ஏமாறுகின்றனர்.


இதுகுறித்து டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தங்கள் நிறுவனங்களில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் யாரையும் பணியில் நியமிப்பதில்லை என்றும், நேரடியாக மட்டுமே பணியாளர்களை தேர்ந்தெடுப்பதாகவும் கூறியுள்ளன. மேலும், பணியாளர்கள் யாரிடமும் டெபாசிட் கட்டுமாறு தாங்கள் கூறுவதில்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் இதுதொடர்பாக இளைஞர்களை எச்சரிக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், போலீசில் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment