Wednesday 3 July 2013

மும்பை: கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 181 புள்ளிகள் உயர்ந்தது. ஒரு மாதத்தில் இல்லாத அளவாக சென்செக்ஸ் 181 புள்ளி உயர்வு




பொருளாதார மந்தநிலை, நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றினால் சென்செக்ஸ் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுடன் இருந்து வந்தது. சமீபத்தில் சென்செக்ஸ் பெருமளவில் வீழ்ச்சி கண்டது. இந்நிலையில், வியாழக்கிழமை முதல் அதில் ஏற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. யூனிலீவர் நிறுவனம் இந்தியாவில் செயல்படும் தன்னுடைய, ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர்கிளையை மேம்படுத்துவதற்காக, பங்குச்சந்தையில் ரூ29,220 கோடியை திரட்ட உள்ளதாக அறிவித்தது. இதனால் பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளில் பெருமளவில் முதலீடு செய்தனர். மேலும், புளூசிப் நிறுவனங்கள் எனப்படும் பங்குச்சந்தையில் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தாத மாருதி சுசுகி, எல் அண்ட் டி, ஆர்..எல், உள்ளிட்டவற்றின் பங்குகளில் நேற்று அதிகம் முதலீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக 3வது நாளாக நேற்றும் சென்செக்ஸ் 181.58 புள்ளிகள் உயர்ந்து, 19,577.39 ஆக இருந்தது. சமீபத்தில் சென்செக்ஸ், கடந்த மாதம் 3ம் தேதி, 19,610.48 புள்ளிகளில் முடிவடைந்தது. அதன்பின்னர் சென்செக்ஸ் அதை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, நேற்று 56.65 புள்ளிகள் உயர்ந்து, 5,898 புள்ளிகளாக இருந்தது.

No comments:

Post a Comment