Tuesday 2 July 2013

பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் அதிகரிப்பு : லிட்டருக்கு 61 காசு உயர்வு


புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து, டீசல் விலையும் நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வரியுடன் லிட்டருக்கு 61 காசு உயர்ந்து, ஸி54.15க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே 15 நாளைக்கு ஒரு முறை நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் விலை கடந்த மாதத்தில் மட்டும் 3 முறை (ஜூன் 1, 16, 29ம் தேதி) உயர்த்தப்பட்டது. கடைசியாக, கடந்த 29ம் தேதி லிட்டருக்கு ஸி2 உயர்த்தப்பட்டது. இதேபோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலையை எட்டும் வரை லிட்டருக்கு 50 காசு வீதம் 15 நாளைக்கு ஒரு முறை உயர்த்திக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி, மே 31ம் தேதியும் ஜூன் 1ம் தேதியும் தலா 50 காசு உயர்த்தப்பட்டது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு, கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. இதனால் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக அவை தெரிவித்தன. எனினும், கடந்த 29ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோதும், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், திடீரென நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வரிகள் சேர்த்து ஒரு லிட்டருக்கு 61 காசு உயர்ந்து, ஸி54.15க்கு விற்பனையாகிறது. விலை உயர்வுக்கு பின்னரும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.8.10 நஷ்டம் ஏற்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment