Saturday 29 June 2013

சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!

தக்காளியில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் இருக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் லேசான அமிலத்தன்மையும் இருக்கும் தக்காளி, சின்னச்சின்ன சருமப் பிரச்னைகளுக்கு மருந்தாக அமைகிறது. எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தருகிறது. தக்காளியை அரைத்து முகத்தில் பூசி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு அப்புறம் குளித்தால், பரு பிரச்னை வராதாம்!

பயணங்களில் சிலருக்குக் குமட்டும். அப்படி குமட்டல் ஆரம்பிக்கும்போது, எலுமிச்சையைப் பிழிந்து, அந்த சாறை சில துளிகள் பருகினால், வாந்தி வருவது போன்ற உணர்வு விலகும்.

டென்ஷன் தலைவலிக்கு சிறந்த தீர்வு தருகிறது பென்சில். டென்ஷனில் நம்மை அறியாமல் நறநறக்கும்போது, தாடைகள் இறுகிவிடுகின்றன. பற்களுக்கு இடையே ஒரு பென்சிலை வைத்து மென்மையாகக் கடித்தால், தாடை தசைகள் தளரும். தலைவலியும் குறையும்.

டிராபிக் நெரிசலில் வாகனம் ஓட்டுவது டென்ஷனை ஏற்படுத்துகிறதா? வாயில் ஒரு பெப்பர்மின்ட் போட்டு மென்றபடி ஓட்டுங்கள். டென்ஷன் குறையும். சீக்கிரமே பயணம் முடிந்ததுபோன்ற உணர்வு ஏற்படும்.

விக்கலை விரட்ட எளிய வழி... ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்படியே வாயில் போட்டு விழுங்குங்கள். நாக்கில் திடீரென வந்து விழும் இனிப்புச்சுவையால், வாயில் இருக்கும் நரம்பு முனைகள் தூண்டப்படுகின்றன. இதனால் விக்கல் விலகுகிறது.

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் சத்து இருக்கிறது. குளித்து முடித்ததும், சருமம் மென்மையாக இருக்கும் நேரத்தில் சுத்தமான ஆலிவ் எண்ணெயை லேசாக உடலில் தடவிக் கொண்டால், தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராது.

வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க நிறைய தயிர் சாப்பிட வேண்டுமாம். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தயிரில் நிறைய உண்டு. வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்களை இவை அழிக்கின்றன. எனவே சுவாசம் இனிமையாகிறது.


சேற்றுப்புண் போன்ற பாதநோய்களுக்கு சிறந்த மருந்து லிஸ்டரின். ஆமாம். உலகெங்கும் மவுத்வாஷாக அறியப்படும் லிஸ்டரினில் ஆன்ட்டிசெப்டிக் மற்றும் நோய்த் தொற்றை அகற்றும் குணங்கள் உண்டு. ஒரு நாளைக்கு இரண்டு முறை 15 நிமிடங்கள் பாதத்தை லிஸ்டரின் கலந்த நீரில் ஊறவைத்தால் பாதநோய்கள் பக்கத்தில் வராது!

No comments:

Post a Comment