Saturday 29 June 2013

வங்கி துவங்க உரிமம் கோரிஅஞ்சல் துறை விண்ணப்பம்


புதுடில்லி:ரிசர்வ் வங்கி, புதிய வங்கி துவங்குவதற்கு உரிமம் வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பம் அளிப்பதற்கு, ஜூலை 1ம் தேதி கடைசி நாளாகும்.

இதையடுத்து, இந்திய அஞ்சல் துறை, புதிய வங்கி துவங்குவதற்கு, நேற்று முன்தினம் விண்ணப்பித்துள்ளது.இதுகுறித்து, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:புதிய வங்கி துவங்குவதற்கான, அனைத்து தகுதிகளும் அஞ்சல் துறைக்கு உள்ளது. வங்கி துவங்குவதற்கு, ரிசர்வ் வங்கி, உரிமம் அளிக்கும் நிலையில், அது, அஞ்சல் துறைக்கு ஒரு மைல் கல் சாதனையாக அமையும்.

இருப்பினும், இதற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அஞ்சல் துறை நாட்டின் சாதாரண குடி மகன் வரையில், தொடர்பு கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்திய அஞ்சல் துறைக்கு வங்கி உரிமம், கிடைக்கும் நிலையில், முதல் ஆண்டில், 50 கிளைகள் துவங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கையை, 150 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை, வங்கி துறையில் களமிறங்கும் நிலையில், அதற்கு, 1,900 கோடி ரூபாய் (500 கோடி ரூபாய் அளிக்கப் பட்ட பங்கு மூலதனம் உட்பட), நிதி தேவைப்படும். மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு பின், இந்த நிதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரி

No comments:

Post a Comment