Saturday 29 June 2013

பெட்ரோல் விலை உயர்வு
   சென்னை, ஜூன் 29:பெட்ரோல் விலை  நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2.32 உயர்ந்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.71.71 ஆனது. டீசல் விலை அடுத்த வாரம் உயரும் என தெரிகிறது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து பெட்ரோல் விலையை மாற்றி அமைத்து வருகிறது.

இதன்படி கடந்த 16–ந்தேதி பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. அதன்பின்னர் 30–ந்தேதி நள்ளிரவு தான் பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால் நேற்றே பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இந்த பெட்ரோல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 32 காசு உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71 ரூபாய் 71 காசாக ஆனது

No comments:

Post a Comment