Saturday 6 July 2013

வெஸ்ட் இண்டீசை சுருட்டி வீசியது : 102 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி


3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா&வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. கோஹ்லி 83 பந்தில் 2 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன் விளாசினார். ரோகித் ஷர்மா 46, ஷிகார் தவான் 69, ரெய்னா 10, தினேஷ் கார்த்திக் 6, முரளி விஜய் 27, ஜடேஜா 2, அஸ்வின் 25 ரன் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டினோ பெஸ்ட் 2, ரோச், பிராவோ, சாமுவேல்ஸ், பொல்லார்டு தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்தது. கெய்ல் 10, பிராவோ 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. 39 ஓவர்களில் 274 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. சாமுவேல்ஸ் 6, பொல்லார்டு 0, வெயின் பிரவாவோ 14, சார்லஸ் 45, ரம்தின் 9, சம்மி 12, ரோச் 34, நரேன் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல்&அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் தலா 3, ஜடேஜா, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் இந்திய அணி இறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 9ந்தேதி இலங்கையை எதிர்த்து ஆடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment