Tuesday, 30 July 2013
Saturday, 20 July 2013
சுத்தம் வேண்டும் நித்தம்!
குளிக்கும் பழக்கம்
நாமும் தினமும் குளித்து
குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும்
கற்றுத்தர வேண்டும்.
என்னதான் அவசரமாக
இருந்தாலும், முகம்-கை-கால் மட்டுமே கழுவிக்கொண்டு
செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும்
உடல் முழுவதும்
சோப் மற்றும்
பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து
நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள்.
தினமும் இரண்டு
வேளை குளித்தால்
மிகவும் நல்லது.
ஈரத் துணியில்
பாக்டீரியா வேகமாக வளரும். குளித்ததும்
ஈரம் போகத்
துடைத்து, துவைத்த
உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு
இரண்டு முறை
ஷாம்பு போட்டுக் குளிக்கவைக்கவும்.
கை சுத்தம்
சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும்,
கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப்
பிராணிகளுடன் விளையாடிய பிறகும்,
கைகளை சுத்தமாக
கழுவ வேண்டும்.
கைகளில் அவ்வப்போது
சோப் அல்லது
கிருமி நாசினி
ஜெல் போட்டு குறைந்தது
20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள்.
மூக்கில் சளித்
தொந்தரவு இருந்தால்
மூக்கைத் தொட்டதும்,
மருந்துகளைத் தொடுவதற்கு
முன்பும் பின்பும்,
கைகளை நிச்சயம்
கழுவ வேண்டும்
என்று வலியுறுத்துங்கள்.
நக இடுக்குகள்
தான் கிருமிகள்
வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால்
நகங்களை எப்போதும்
வெட்டி, தூய்மையாக
வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.
பல் சுத்தம்
சொத்தை பல் பிரச்சனை
குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல்
துலக்கக் கற்றுக்கொடுக்காததே
இதற்குக்
காரணம். தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை
சுத்தம் செய்ய
கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே
பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால்தான்.
பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க
குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர்.
குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து,
நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன்,
பின், மேல்,
கீழ் என எல்லாப்
பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம்
தூக்கும். பளிச்
எனப் பற்களும்
பிரகாசிக்கும்.
காயங்களை மூட வேண்டும்
காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும்
பழக்கமும் குழந்தைகளுக்கு
இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள்
மிக எளிதில்
புகுந்துவிடும். இதைத் தவிர்க்க,
காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை
சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட
வேண்டும். காயங்கள் மீது கைகள் படக்
கூடாது என்று
அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி
இடங்களில் குழந்தைக்கு
எந்த சிறிய
காயம் பட்டாலும்,
உடனடியாகத் தெரிவிக்கும்படி
குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்
தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்
தும்மல், இருமல் வந்தால்,
நன்கு உலர்ந்த
துணி, அல்லது
டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக்
கற்றுக்கொடுங்கள். ஒருவேளை
தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும்
இல்லை என்றால்,
முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச்
சொல்லலாம். ஏனெனில், கையில் தும்மல்
பட்டால், அதில்
கிருமிகள் பரவி,
மற்ற குழந்தைகளைத்
தொடுவதன் மூலம்
இந்த கிருமி
மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால்
மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய
பகுதியில் மட்டுமே
இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக்
கிருமிகளும் இல்லாமல் போய்விடும். குழந்தைகளை
வெளியே அழைத்துச்
செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது
உடையின் மேல்
'பின்’ செய்து
அனுப்புவது நல்லது.
Windows XP இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தல் செய்யுமாறு அறிவுறுத்தல்
கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில்
இயக்க அமைப்பில்
பிரபலமான 'விண்டோ
எக்ஸ்பி' பயன்படுத்துபவர்களுக்கு
எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்,
Windows XP மென்பொருள்களுக்கு எதிராக ஹேக்கிங்
முயற்சிகள் ஊடுருவதால் 'உடனடியாக' மேம்படுத்தப்பட வேண்டும்
என்று அவர்கள்
கூறியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனமும்
Windows XP-க்கான உதவிகளை அடுத்த வருடம்
ஏப்ரல் மாதத்துடன்
நிறுத்தி¬õ‚èŠð´‹. இதனால் Windows XP-க்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மைக்ரோசாப்டிடம்
இருந்து கிடைக்காமல்
போகும் நிலை
உருவாகிவிடும்.
இதனையடுத்து Windows
XP இயங்குதளத்தை பயன்படுத்தும் அனைத்து பயனர்களையும் மற்றும்
நிறுவனங்களையும் உடனடியாக ஏப்ரல், 2014 முன் அவர்களின்
மென்பொருள் பயன்பாடுகள் இயக்க மேம்படுத்த வேண்டும்
என்று பரிந்துரை
செய்யப்படுகிறது. மைக்ரோசாப்ட் ஆரம்பத்தில்
2001 ல் Windows XP இயங்குதளத்தை வெளியிடப்பட்டது.
தற்போதைய வெளியீட்டில்
Windows XP பதிப்பு Windows XP சேவை பேக்
3 அழைக்கப்படுகிறது. பின்னர், மைக்ரோசாப்ட்
வாடிக்கையாளர்களுக்காக அடுத்த மூன்று
பதிப்புகளான 8 நவம்பர் 2006 ல் Windows
Vista, ஜூலை 2009 ல் Windows 7 மற்றும் ஆகஸ்ட் 2012 ல்
Windows 8 வெளியிட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட்
நிறுவனத்திடம் இருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான
இயங்குதளமாக Windows 8 கருதப்படுகிறது.
Friday, 19 July 2013
டிவிட்டரில் பாவ மன்னிப்பு தரும் போப்
வாடிகனில் உள்ள போப்
பிரான்சிஸ் நவீன காலத்திற்கு ஏற்ப இனி
சமூக வலைதளமான
டிவிட்டர் மூலம்
பாவமன்னிப்பு அளிக்கவிருக்கிறார்.
இந்த தலைமுறையினரின் அன்றாட
வாழ்க்கைமுறையில் சமூக வலைத்தளம் மற்றும் இணையதளங்கள்
ஆகியவற்றிற்கு முக்கிய இடம் உள்ளது.
இன்றைய நவீன உலகத்தில்
பழைய முறைகளை
அனைவராலும் பின்பற்ற முடியாத நிலை இருப்பதால்
டிவிட்டர் மூலம்
அனைத்து முக்கிய
விஷயங்களையும் உலக மக்களுடன் வாடிகானிலிருந்து போப் பகிர்ந்துக்கொள்கிறார்.
Monday, 15 July 2013
ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால்
இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால்
இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு
ஏற்படுகிறது.
இவற்றை அகற்றி
இரத்தத்தை சுத்தப்படுத்தி
இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு
கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது
காயவைத்த பொடியை
பாலில் கலந்தோ,
தேன் கலந்தோ
சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும்
வலுப்பெறும். கரிசலாங்கண்ணி
உடலுக்கு ஆரோக்கியத்தையும்
புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை
என்ற பெயரும்
உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும்.
மூளை நரம்புகளை
தூண்டி புத்துணர்வு
பெறச் செய்யும்.
ஆஸ்துமா, இருமல்,
ஈளை போன்ற
பாதிப்பு
கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன்
திப்பிலி சூரணம்
சேர்த்து தினமும்
ஒருவேளை என
ஒரு மண்டலம்
சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன்
சுவாசம் சம்பந்தப்பட்ட
அனைத்து நோய்களும்
தீரும்.
இதய அடைப்பை நீக்கி
இதயத்தை சீராக
செயல்பட வைக்கும்.
மண்ணீரல், சிறுநீரகத்தைப்
பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும்
மந்த நோய்களைப்
போக்கும். கண்பார்வையை
தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு
படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை
பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை,
தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும்
கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து
கஷாயம் செய்து
அருந்தலாம். இதன்மூலம்
உடலில் உள்ள தேவையற்ற
கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி
இலையை நீர்
விடாமல் சாறு
எடுத்து அதை
சோப்பு போடப்படாத வெள்ளைத்
துணியில் நனைத்து
நிழலில் உலர்த்தி,
சுருட்டி திரியாக்கி
சுத்தமான நெய்
விளக்கில் எரித்தால்
கருப்பு பொடியாக
வரும்.
இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.
இதனால் கண்கள் பிரகாசமாக
ஆவதுடன், கண்கள்
குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது
பழங்கால பாட்டி
சொன்ன வைத்தியமாகும்
முக்கிய மருந்துகளுக்கு இனி மத்திய அரசிடமே லைசென்ஸ் பெற வேண்டும்
புதுடெல்லி: மருந்துகள் மற்றும்
அழகுப்பொருட்கள் சட்டம் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை
அனுமதி வழங்கியுள்ளது.
இதில் பல்வேறு
புதிய விதிகள்
கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி, உயிர்காக்கும்
வகையைச் சேர்ந்த
17 முக்கிய மருந்துகளுக்கு இனி மாநில அரசிடம்
லைசென்ஸ் பெற
முடியாது. இதற்கு
மத்திய அரசிடம்
மட்டுமே லைசென்ஸ்
பெற வேண்டும்.
சோதனையின்போது உயிரிழப்பு ஏற்பட்டால்,
அதற்கான இழப்பீடுகளை
வழங்குவது தொடர்பாக
தனி விதிமுறை
கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி சிறை
தண்டனை, அபராதம்
ஆகியவை விதிக்கப்படும்.
மேலும், மருந்துகள்
தொடர்பான விவகாரங்களை
விசாரிப்பதற்காக, மத்திய மருந்து ஆணையம் அமைக்கவும்
மசோதாவில் வழிமுறைகள்
செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 160 ஆண்டுகள் நீடித்த தந்தி சேவை முடிவுக்கு வந்தது
புதுடெல்லி : இந்தியாவில் கடந்த
160 ஆண்டுகளாக இன்ப, துன்பங்களை சுமந்து வந்த
தந்தி சேவை
முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் வரலாற்று
பதிவாக இருக்கும்
என்று
ஆயிரக்கணக்கானோர் தங்கள் உறவினர்,
நண்பர்களுக்கு வாழ்த்து தந்தி கொடுத்தனர். நேற்றிரவு
9 மணியுடன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்தியாவில்
தந்தி சேவை
முதல் முறையாக
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது 1850ம் ஆண்டு
கிழக்கிந்திய கம்பெனியால் கொல்கத்தா துறைமுகத்துக்கும், இங்கிலாந்தில் உள்ள டைமண்ட் துறைமுகத்துக்கும்
இடையே அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 1854ம் ஆண்டு
மக்கள் பயன்பாட்டுக்காக
ஆங்கிலேய ஆட்சியாளர்கள்
இந்தியா முழுவதும்
தந்தி சேவையை
கொண்டு வந்தனர்.
தந்தி சேவைக்காக
பி.எஸ்.என்.எல்.
நிறுவனம் ஆண்டு
தோறும் ணீ100
கோடியை செலவிட்டு
வந்தது. இதன்
மூலம் அரசுக்கு
ரூ.75 லட்சம்
வருவாய் கிடைத்து
வந்தது. இந்தியாவில்
தந்தி சேவை
முந்தைய காலங்களில்
விஞ்ஞான பொக்கிஷம்
என்று சொல்லலாம்,
அந்த அளவுக்கு
இச்சேவை முக்கியமானதாக
கருதப்பட்டது.
வெளியூரில் நடக்கும்
திருமணத்திற்கு செல்ல முடியாதவர்கள் வாழ்த்து தெரிவிக்கவும்,
வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்கள்
அது குறித்து
தகவல் தெரிவிக்கவும்,
நெருக்கமான ஒருவர் இறந்து விட்டால் தகவல்
தெரிவிக்க, வேலை வாய்ப்புக்கான நேர் காணல்
அழைப்பு போன்றவவை
அனுப்ப தந்தி
சேவை பயன்பட்டு
வந்தது.
பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களுக்கும்
தந்தி சேவை
மிகவும் வசதியான
சேவையாக இருந்து
வந்தது. காரணம்
கடிதத்தை விட
தந்தி வேகமாக
சென்று சேர்ந்து
விடும். கிராமங்களில்
ஒருவர் வீட்டிற்கு
தந்தி வந்தால்
அக்கம் பக்கத்தில்
உள்ளவர்கள் என்ன ஏதோ என்று பதறும்
நிலைமையும் இருந்தது. இதுவும் காலப்போக்கில் மாறியது.
தந்தியை எவ்வித
பயமும் இன்றி
கையாள தொடங்கினர்.
ஆனால் இன்டர்நெட், செல்போன்
போன்ற நவீன
தொழில்நுட்ப வசதிகள் வந்தவுடன் தந்தி சேவை
யின் பயன்பாடு
படிப்படியாக மங்கத் தொடங்கியது. இதனால் தந்தி
சேவையை நிறுத்தி
கொள்ள மத்திய
அரசு முடிவு
எடுத்தது. தற்போது
நாட்டில் 75 தந்தி சேவை மையங்கள் உள்ளன.
ஆயிரம் ஊழியர்கள்
பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும்
பிஎஸ்என்எல்லில் வேறு துறைக்கு மாற்றப்படுகின்றனர்.
கடைசி நாள் என்பதால்
நாடு முழுவதும்
முக்கிய நகரங்களில்
உள்ள தந்தி
அலுவலகங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நேற்று
அதிகமாக இருந்தது.
மும்பை, கொல்கத்தா,
டெல்லியில் இளைஞர்களும் முதியோரும் தங்கள் உறவினர்களுக்கு
கடைசியாக வாழ்த்து
தந்தி அனுப்பினர்.
இனிமேல் இந்த
சேவை கிடையாது
என்பதால் பலர்
வருத்தத்தோடு இருந்தனர்.
கடந்த 160 ஆண்டுகளாக மக்களின்
வாழ்க்கையோடு இன்பங்களையும், துன்பங்களையும்
சுமந்து வந்து
உறவாடிய தந்தி
சேவை நேற்றிரவு
9 மணியுடன் நம்மிடம் இருந்து பிரியா விடை
பெற்றது. கடைசி
நாள் என்பதால்
தமிழகம் முழுவதும்
உள்ள தந்தி
அலுவலகங்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இளைஞர்கள் அதிக
எண்ணிக்கையில் நேற்று தந்தி அனுப்பினர். சென்னையை
பொறுத்தவரை அண்ணா சாலை தந்தி அலுவலகம்,
பாரிமுனை ஜி.பி.ஓ கட்டிடம் மற்றும்
எத்திராஜ் சாலையில்
உள்ள தந்தி
அலுவலகங்களில் வழக்கத்தை விட நேற்று கூட்டம்
அதிகமாக இருந்தது.
தந்தி சேவையை
நிறுத்த வேண்டாம்
என மூத்த
குடிமக்கள் பலர் மத்திய அரசுக்கு நேற்று
தந்தி அனுப்பினர்.
கடைசி நாள் என்பதால்
பலர் அடுத்த
தலைமுறையினருக்கு தந்தி சேவை குறித்து சொல்ல
தனக்கு தானேயும்,
உறவினர்களுக்கும் தந்தி அனுப்பி வாழ்த்து செய்திகளை
பறிமாறிக் கொண்டனர்.
அதே போல்,
பெற்றோர் சிலர்
தங்கள் சின்ன
வயது மகன்,
மகள்களுக்கு தந்தி அனுப்புவதற்கான விண்ணப்பங்களை எவ்வாறு
பூர்த்தி செய்வது
என்பதை சொல்லி
கொடுத்த காட்சியை
காணமுடிந்தது.
மேலும் கடைசி நாள்
என்பதால் முக்கிய
தந்தி அலுவலகத்தில்
நேற்று நடந்த
நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு
செய்யப்பட்டன. இந்த பதிவுகளை வரும் காலங்களில்
நடத்தப்படும் கண்காட்சிக்கு பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர். இவ்வளவு நாள் தந்தி அனுப்ப
வருபவர்களிடம் இன்பங்களையும், துன்பங்களையும்
பகிர்ந்து கொண்டோம்.
இனி இது
போன்ற நிகழ்வுகளை
காண்பது என்பது
முடியாத காரியம்.
இதுவரை தந்தி
சேவைக்கு முழு
ஒத்துழைப்பு அளித்ததற்காக தந்தி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு
நன்றி தெரிவித்து
கொண்டனர்.
சென்னை எத்திராஜ் சாலையில்
உள்ள தந்தி
அலுவலக ஊழியர்கள்
கூறுகையில், ‘ ஒரு நாளைக்கு இங்கிருந்து அதிகபட்சம்
50 தந்தி வரை
செல்லும். தந்தி
சேவைக்கு கடைசி
நாள் என்பதால்
நேற்று மட்டும்
இரவு 7 மணி
வரை 350 தந்திகள்
வரை அனுப்பப்பட்டன.
அண்ணா சாலை
தந்தி அலுவலகத்தில்
400 தந்திகள் வரை பெறப்பட்டன. சாதாரண நாட்களில்
50 தந்திகள் தான் இங்கிருந்து அனுப்பப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
160 ஆண்டுகள் சேவை வழங்கிய
தந்தி சேவையை
நிறுத்த கூடாது
என்று தந்தி
நிறுவன ஊழியர்கள்,
தந்தி சேவையை
நேற்று கடைசியாக
பயன்படுத்த வந்தவர்கள் நூற்றுக்கணக்கில்
மத்திய தகவல்
தொடர்பு துறை
அமைச்சர் கபில்
சிபலுக்கு தந்தி
அனுப்பினர். கடைசியாக தந்தி கொடுப்பது 9 மணியோடு
நிறுத்தப்பட்டது. அது வரை பெறப்பட்ட தந்திகள்
அனைத்தும் முழுமையாக
உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தோஷம்... வருத்தம்
* தந்தி என்று வந்தாலே
போதும், குஷியை
விட குடும்பத்தில்
பயம் தான்
கவ்வும்; அதை திறந்து
படிக்கும் வரை.
* மொபைல், எஸ்எம்எஸ் என்று
அறிவியல் புரட்சியால்
பலவீனம் அடைந்தது
தந்தி.
*ராணுவத்தினருக்கு பெரிதும் கைகொடுத்தது
தந்தி. லீவு,
டிரான்ஸ்பர், பணி அழைப்பு எல்லாம் தந்தியில்தான்.
* கோர்ட்டில் வலுவான ஆதாரமாக
தந்தி கருதப்பட்டது.
* குக்கிராமங்களில் மட்டும் தான்
தந்தி சேவை
கடைசி வரை
முக்கிய தகவல்
தொடர்பாக இருந்தது.
*தந்தி சேவைக்கு செலவு
மிக அதிகம்.
100 கோடி செலவுக்கு
ஆண்டு வருமானம்
75 லட்சம் ரூபாய்
தான்.
* 60 ஆண்டுக்கு பின் 2011 மே
மாதம் தான்
50 வார்த்தைகளுக்கு ரூ.27 என்று
கட்டணம் உயர்த்தப்பட்டது.
*கடைசி நாள் என்பதால்
தந்தி கொடுப்பது
வீடியோ எடுக்கப்பட்டது.
*மக்களிடம் காணப்பட்டது குஷி;
ஆனால், ஊழியர்கள்
என்னவோ கனத்த
மனதுடன் பணியை
முடித்தனர்.
* சினிமாவில் திடீர் திருப்பங்களை
ஏற்படுத்த கைகொடுத்ததும்
தந்திதான்.
Saturday, 13 July 2013
பஜாஜின் புதிய டிஸ்கவர் 125-டி
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்
125 சிசி ரக
வாகனத்தில் புதிய 125-டி மோட்டார் சைக்கிளை
சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின்
விற்பனைப் பிரிவு
பொது மேலாளர்
அஸ்வின் ஜெய்காந்த்
கூறியது: பஜாஜ்
நிறுவனத்தின் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிள்கள்
மிகவும் வெற்றிகரமாக
விற்பனை ஆகி,
எக்ஸிகியூடிவ் ரக பைக் சந்தையில் முன்னணி
இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு
மே மாதம்
முதல் 4.5 லட்சம்
டிஸ்கவர் ரக
பைக்குகளை விற்பனை
செய்துள்ளோம்.
இப்போது, 125 சிசி ரக
வாகனங்களில் புதிய அணிவகுப்பாக டிஸ்கவர் 125-டி
என்ற மாடலை
அறிமுகம் செய்கிறோம்.
டிஸ்கவர் 100-டி மற்றும் 125-எஸ்டி ரக
மோட்டார் சைக்கிள்களுக்கு
இடைப்பட்ட மாடலாக
புதிய பைக்
இருக்கும். சென்னை விற்பனையக விலை ரூ.
54,022 முதல். நான்கு வண்ணங்களில் இவை விற்பனைக்கு
வந்துள்ளன என்றார்.
Thursday, 11 July 2013
இந்தியாவில் ஐபோன் 5 ரிலையன்ஸ் விற்பனை
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்
5 மொபைல் போனை,
இந்தியாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் விற்பனை
செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த போன்
விற்பனையுடன் பல்வேறு சேவைத் திட்டங்களையும் அறிவித்துள்ளது.
ரூ.304க்கு,
மாதந்தோறும் இலவச பேசும் நிமிடங்களும், 2 ஜிபி
அளவுக்கான 3ஜி டேட்டாவும் கிடைக்கும். ஏற்கனவே
சென்ற நவம்பர்
முதல் ஏர்செல்
மற்றும் ஏர்டெல்
நிறுவனங்கள், ஐபோன் 5 ஐ விற்று வருகின்றன.
இந்த நிறுவனங்களும்
பல்வேறு சேவைத்
திட்டங்களை அறிவித்து இயக்கி வருகின்றன. ரிலையன்ஸ்
இலவச எஸ்.எம்.எஸ்.
எதனையும் தன்
திட்டத்தில் அறிவிக்கவில்லை. 16 ஜிபி திறன் கொண்ட
ஐபோன் 5 ரூ.45,500க்கும், 32 ஜிபி
ரூ.52,500க்கும்
மற்றும் 64 ஜிபி ரூ.59,500க்கும் விற்பனை
செய்யப்படுகின்றன.
ரிலையன்ஸ், ரூ.304, ரூ.504,
ரூ.804 மற்றும்
ரூ.1,004 எனப்
பல்வகை திட்டங்களை
வழங்குகிறது. இந்த திட்டங்கள், எந்த வகை
ஐபோன் 5 வாங்கினாலும்
கிடைக்கும். அழைப்பு நிமிடங்கள் மற்றும் இலவச
டேட்டாவுடன், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும்
ட்விட்டர் தளங்களுக்கான
இணைப்பு சேவை
மூன்று மாதங்களுக்கு
இலவசமாகக் கிடைக்கும்.
ரிலையன்ஸ் நிறுவனம்,
இந்த போனை
ரிலையன்ஸ் வேர்ல்ட்
மற்றும் ரிலையன்ஸ்
மொபைல் ஸ்டோர்ஸ்
வழியாக விற்பனை
செய்கிறது.
சாம்சங் கேலக்ஸி s4 மினி ரூ.27,990 இந்தியாவில் தொடக்கம்.
சாம்சங் கேலக்ஸி s4 இந்தியாவில்
துவங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்
நிறுவனத்தின் முதன்மை தொலைபேசி, சாம்சங்
கேலக்ஸி S4 . சாம்சங் கேலக்ஸி
S4, மினி அம்சங்கள்
256ppi ஒரு பிக்சல்
அடர்த்தி, ஒரு
4.3-அங்குல qHD (540x960 பிக்சல்கள்) சூப்பர் AMOLED காட்சி
கொண்டுள்ளன. ஸ்மார்ட்போன் ரேம்
1.5GB, 1.7GHz dual-core செயலி மூலம்
இயக்கப்படுகிறது. இது 5GB பயனருக்கு அணுகும்
இது உள்
சேமிப்பு 8GB வழங்குகிறது. உட்புற சேமிப்பு
மேலும் ஒரு
microSD அட்டை உதவியுடன் 64GB வரை விரிவடைந்தது.
தொலைபேசி மேல்
சாம்சங் TouchWiz இயற்கை UX அடுக்கு ஆண்ட்ராய்டு
4.2.2 (ஜெல்லி பீன்) இயங்குகிறது. கேலக்ஸி
S4, மினி 8 அம்சங்கள் மெகாபிக்சல்
பின்பகுதி கேமரா
மற்றும் ஒரு 1.9- மெகாபிக்சல்
எச்டி முன்
எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. மேலும்,
தொலைபேசி கேமரா
ஒலி & ஷாட்
போன்ற கூடுதல் அம்சங்களை
ஆதரிக்கின்றது. இது தவிர, சாம்சங் கேலக்ஸி
S4, மினி
மூலம் க்ளிக்
படங்களை தானாக
பயனர் காலவரிசை,
பூகோள
குறியிடுதல் தகவல், அல்லது
ஒரு புகைப்பட
ஆல்பத்தை உருவாக்க ஒரு குறிப்பிட்ட நிகழ்வை
படி கூடிதலாக
சேமிக்கப்படும். S4 மினி ஒரு 1,900 Mah பேட்டரி
மூலம் இயக்கப்படுகிறது.
சாம்சங்களில் இரு வண்ண விருப்பங்கள்
உள்ளன. கேலக்ஸி
S4, மினி
ஸ்மார்ட்போன் ,- வெள்ளை பாரஸ்ட்
மற்றும் பிளாக்
மிஸ்ட்
வழங்கப்படுகின்றன.
சாம்சங் கேலக்ஸி S4, மினி
முக்கிய குறிப்புகள்
4.3-அங்குல qHD சூப்பர்
காட்சி AMOLED
1.7GHz dual-core செயலி
ரேம் 1.5GB
8GB உட்புற சேமிப்பு,
microSD அட்டை மூலம் 64GB வரை விரிவடைந்தது
8 மெகாபிக்சல் பின்பகுதி
எதிர்கொள்ளும் கேமரா
1.9-மெகாபிக்சல் எச்டி
முன் எதிர்கொள்ளும்
கேமரா
1900mAhபேட்டரி
ஆண்ட்ராய்டு 4.2.2 (ஜெல்லி பீன்)
Monday, 8 July 2013
சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்
* வைட்டமின்கள்-ஏ நிறைந்த
பப்பாளிப் பழத்தின்
தோலைசீவி அதை
நன்கு கூழ்
போல ஆக்கி
முகத்தில் 'பற்று"போலப் போட சருமத்தின்
நிறம் கூடும்.
சருமம் பட்டுப்போல
மென்மையாகும்.
* ஆப்பிள் பழம் வைட்டமின்
நிறைந்தது. இதையும் தோல் சீவி கூழ்போல
ஆக்கி முகத்தில்
'பற்று" போல போட முகத்தில் வரும்
கரும்புள்ளிகள் நீங்கும்.
* சாத்துக்குடி பழமும் சி
-வைட்டமின் செறிந்தது தான். இதன் மேல்தோல்,
உள்தோல் இரண்டையுமே
உரித்து அதை
நன்கு பிசைந்து
அதை முகத்தின்
மீது அப்படியே
வைக்கலாம். அல்லது இதன் சாற்றை முகத்தில்
தடவலாம். முகத்தில்
அதிகம் உள்ள
எண்ணெய் பசையைஇது
நீக்கி- சருமத்தைப்
பாதுகாக்கும்.
* ஆரஞ்சு(கமலா) பழமும்
வைட்டமின் -சி நிறைந்தது. இதைசாத்துக்குடியைச்செய்வது போலச் செய்யலாம்.
இதன் சாறு
சருமத்திற்கு பளபளப்பு தரும்.
* கொய்யாப்பழமும் வைட்டமின் -சி
அதிகம் கொண்டது.
இதை நன்கு
கூழ்போல ஆக்கி
முகத்தில் போட
முகம் பளபளக்கும்.
நிறம் மேம்படும்.
* எல்லா காலங்களிலுமே கிடைக்கும்.
வாழைப்பழம் உலர் சருமத்திற்கு மிகவும் நல்லது.
இதை கூழ்போல
ஆக்கி முகத்தில்
பேக் போலப்
போட வேண்டும்.
உலர் சருமம்
உடையவர்களும், 40 வயது தாண்டியவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.
* இந்த 'பேக்கு"களை
பருக்கள் இருக்கும்
போது கூட
பயன்படுத்தலாம். இதைப் போட்ட பின்பு சுமார்
15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறி பின்பு
வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம்.
பழங்களைப் போலவே நாம்
அன்றாடம் பயன்படுத்தும்
காய்கறிகளையும் கூட நாம் சருமத்திற்குப்பயன்படுத்தலாம்.
Subscribe to:
Posts (Atom)