Thursday 11 July 2013

இந்தியாவில் ஐபோன் 5 ரிலையன்ஸ் விற்பனை


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மொபைல் போனை, இந்தியாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த போன் விற்பனையுடன் பல்வேறு சேவைத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. ரூ.304க்கு, மாதந்தோறும் இலவச பேசும் நிமிடங்களும், 2 ஜிபி அளவுக்கான 3ஜி டேட்டாவும் கிடைக்கும். ஏற்கனவே சென்ற நவம்பர் முதல் ஏர்செல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், ஐபோன் 5 விற்று வருகின்றன. இந்த நிறுவனங்களும் பல்வேறு சேவைத் திட்டங்களை அறிவித்து இயக்கி வருகின்றன. ரிலையன்ஸ் இலவச எஸ்.எம்.எஸ். எதனையும் தன் திட்டத்தில் அறிவிக்கவில்லை. 16 ஜிபி திறன் கொண்ட ஐபோன் 5 ரூ.45,500க்கும், 32 ஜிபி ரூ.52,500க்கும் மற்றும் 64 ஜிபி ரூ.59,500க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
ரிலையன்ஸ், ரூ.304, ரூ.504, ரூ.804 மற்றும் ரூ.1,004 எனப் பல்வகை திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள், எந்த வகை ஐபோன் 5 வாங்கினாலும் கிடைக்கும். அழைப்பு நிமிடங்கள் மற்றும் இலவச டேட்டாவுடன், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் தளங்களுக்கான இணைப்பு சேவை மூன்று மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். ரிலையன்ஸ் நிறுவனம், இந்த போனை ரிலையன்ஸ் வேர்ல்ட் மற்றும் ரிலையன்ஸ் மொபைல் ஸ்டோர்ஸ் வழியாக விற்பனை செய்கிறது.



No comments:

Post a Comment