Monday 15 July 2013

முக்கிய மருந்துகளுக்கு இனி மத்திய அரசிடமே லைசென்ஸ் பெற வேண்டும்



புதுடெல்லி: மருந்துகள் மற்றும் அழகுப்பொருட்கள் சட்டம் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதில் பல்வேறு புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, உயிர்காக்கும் வகையைச் சேர்ந்த 17 முக்கிய மருந்துகளுக்கு இனி மாநில அரசிடம் லைசென்ஸ் பெற முடியாது. இதற்கு மத்திய அரசிடம் மட்டுமே லைசென்ஸ் பெற வேண்டும்.


சோதனையின்போது உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடுகளை வழங்குவது தொடர்பாக தனி விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும். மேலும், மருந்துகள் தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதற்காக, மத்திய மருந்து ஆணையம் அமைக்கவும் மசோதாவில் வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment