Wednesday 19 June 2013














சிவகங்கை: சிவகங்கையில் நடந்த சிறப்பு ஆசிரியர் நியமன நேர்காணலில், திருமண கோலத்துடன், புதுமண தம்பதியினர் பங்கேற்றனர்.


அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்திற்கான, நேர்காணல், சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. 10 பணியிடங்களுக்கு, ஏராளமானோர் வந்திருந்தனர். இளையான்குடி, புலியூரைச் சேர்ந்த, உடற்கல்வி ஆசிரியரான, கிருஷ்ண கோபியும், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவருக்கு, நேற்று, இளையான்குடியில், திருமணம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு தாலி கட்டிய கையுடன், மனைவி சாந்தி சகிதமாக, சிவகங்கை வந்து, நேர்காணலில் பங்கேற்றார். கிருஷ்ணகோபி கூறுகையில், ""அரசு வேலை முக்கியம். மனைவியை மட்டும் மகாலில் விட்டுச் செல்ல முடியாது என்பதால், அவரையும் அழைத்து வந்தேன். நேர்மையாக, தகுதியுள்ளவர்களை தேர்வு செய்தால், எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்,'' என்றார். இதேபோல, மற்றொரு புதுமண ஜோடியும், நேர்காணலில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment