Wednesday 19 June 2013

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள்,டிரைவர் உட்பட 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலையில் வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற மினி ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . மேலும் 2 பேர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தினால் இந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
இறந்த மாணவர்கள் பெயர் விவரம் ;

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உள்பட 8 பேர் பலியாயினர். இந்த விபத்தில் காயமுற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: சிவக்குமார் ( வயது 11 ) , 6ம் வகுப்பு, மதியழகன் ( வயது 17 ), 12 ம் வகுப்பு, சத்யா ( வயது 17 ), 12 ம் வகுப்பு, நாராயணசாமி ( வயது 15 ), 9ம் வகுப்பு, மணிகண்டன் ( வயது 15 ), 9ம் வகுப்பு, அருண்குமார் ( வயது 14 ), 9ம் வகுப்பு, விஷ்ணு ( வயது 17 ), 12 ம் வகுப்பு. மேற்கூறிய 7 பேரும் விஜயரகுநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். டிரைவர் ஆறுமுகம் (வயது 27 ) பலியானார்.

மேலும் ராஜேஸ்குமார் ( வயது 12 ), மணிகண்டன் ( வயது 17 ), ஆகிய இருவரும் காயமுற்ற நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் விபத்தில் சிக்கியது எப்படி ? இன்று நடந்த விபத்தில் மாணவர்கள் சிக்கிய சம்பவம் விஜயரகுநாதபுரம் மற்றும் வல்லந்திரா கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதட்டமும் ,பரபரப்பும் இப்பகுதி முழுவதும் நிலவுகிறது. வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு விஜயரகுநாதபுரம் மெயின்ரோட்டில் ஏதாவது வாகனம் வருகிறதா ஏறிச்செல்லலாமா என மாணவர்கள் சாலையோரங்களில் காத்து நிற்பர்.


இந்த வழியாக செல்லும் பால், மண் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் மினி வேன்களில் ஏறிச்செல்வர். இது போல் இன்று இந்த வழியாக வந்த பால் ஏற்றும் மினி ஆட்டோவில் இந்த மாணவர்கள் அனைவரும் ஏறினர். பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த மினி ஆட்டோ மீது பூவரசக்கொடி என்னும் கிராமத்தில் தனியார் பஸ், நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment