Wednesday 19 June 2013

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.
கடந்த 2011 உலக கோப்பை பைனலுக்கு பின், இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன. இந்திய அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, கோஹ்லி தவிர மற்றவர்கள் புதுமுகங்களாக உள்ளனர்.
இருப்பினும், சூதாட்ட சர்ச்சை, பி.சி.சி.., ஏற்பட்ட குழப்பம் என அனைத்தையும் மீறி, இந்திய அணி அசத்துகிறது. இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிநடை இன்றும் தொடரும் என நம்பப்படுகிறது. துவக்கத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தலாம். இத்தொடரில் அதிக ரன்கள் (264) குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான், 2 சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா, 2 அரைசதம் உட்பட 135 ரன்கள் எடுத்துள்ளார்.
தவிர, தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா என, "பேட்டிங்' படை வலுவாக உள்ளது. பயிற்சியில் ஏற்கனவே இலங்கை அணியை வீழ்த்தியுள்ள இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
மழை வந்தால் பைனலில் இந்தியா:

இன்று போட்டி நடக்கும் கார்டிப்பில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், "பி' பிரிவில் முதலிடம் பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி(6 புள்ளி) பைனலுக்கு தகுதி பெறும். "' இரண்டாவது இடம் பெற்றதால் இலங்கை அணி(4 புள்ளி) வெளியேறும்.

No comments:

Post a Comment