Monday 8 July 2013

இன்சூரன்ஸ் நிறுவனங்களின் 1000 கிளைகள் மூடல்


 நெல்லை : தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், 1000க்கும் மேற்பட்ட கிளைகளை மூடிவிட்டன. ரூ.19 ஆயிரம் கோடி அளவுக்கு பாலிசிகளை 6 கம்பெனிகள் சரண்டர் செய்துள்ளன என நெல்லையில் நடந்த எல்ஐசி கோட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதுநெல்லை கோட்ட எல்ஐசி ஊழியர் சங்க 2 நாள் மாநாடு, பாளையங்கோட்டையில் நேற்று துவங்கியது. மாநாட்டிற்கு கோட்ட தலைவர் மதுபால் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில செயலா ளர் மோகன் வரவேற்றார்.

இணைச் செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். பொது செயலாளர் சுவாமிநாதன் மற்றும் புஷ்பராஜன், மதுரை கோட்ட செயலா ளர் சுரேஷ்குமார், பீட்டர் இருதயராஜ், முருகேசன் ஜெயராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். என்எல்சி பங்கு விற்பனை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். என்எல்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எல்ஐசி நிறுவனம் இந்த ஆண்டு 5 நிலைகளிலும் முன்னேறியுள்ளது. பாலிசி உரிமம் வழங்குவதில் இந்த ஆண்டு அடைந்த முன்னேற்றம் கடந்த 11 ஆண்டுகளில் ஒரு மைல்கல் எனலாம். ஆனால், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இதுவரை ஆயிரம் கிளைகளுக்கு மேல் மூடியுள்ளது. 2012,13ம் ஆண்டில் மட்டும் ரூ.19 ஆயிரம் கோடி அளவுக்கு பாலிசிகளை 6 கம்பெனிகள் சரண்டர் செய்துள்ளன என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.


இந்த சூழலில் மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு உயர்வு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குமாரசாமி நன்றி கூறினார். இன்று 2வது நாள் மாநாடு நடக்கிறது.

No comments:

Post a Comment