Thursday 27 June 2013

குற்றாலத்தில் களை கட்டிய சீசன் பாழடைந்த நிலையில் பேரூராட்சி விடுதிகள் தங்க வசதியின்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு

தென்காசி, : குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பேரூராட்சி விடுதிகள் தங்குவதற்கு தகுதியற்று பாழடைந்த நிலையில் கிடக்கின்றன.
   தமிழகத்தில் வேறு எந்த சுற்றுலா தலத்திலும் இல்லாத வகையில் குற்றாலத்தில் தான் மெயி
னருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலிய ருவி, நெய்ய ருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி என 9 அருவிகள் அருகருகே அமைந்துள்ளன.
   இதில் செண்பகாதேவி, தேனருவிகளில் மட்டும் சமீபகாலமாக குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதே போல சிற்றருவியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற அருவிகளில் இலவசமாகவே சுற்றுலா பய ணிகள் குளிக்கலாம்.
கேரளாவில் உள்ள கும்பாவுருட்டி, மனலாறு, பாலாறு போன்ற அருவிகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வருக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே, ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் குற்றாலத்திற்கு சீசனை அனுபவிக்க படையெடுத்து வருகின்றனர்.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் தங்கி சீசனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குற்றாலம் பேரூ ராட்சி சார்பில் தென்காசி சாலை தங்கும் விடுதி, செங்கோட்டை சாலை தங்கும் விடுதி, மல்லிகை விடுதி, அருவி இல்லம், முல்லை விடுதி, ரோஜா காட்டேஜ், மெயினருவி பகுதியில் தங்கும் குடில்கள் கட்டப்பட்டன.
மிகவும் காற்றோட்ட மாக, விசாலமான முறை யில் இரண்டு படுக்கை, மூன்று படுக்கை, நான்கு படுக்கை, சமையலறையுடன் கூடிய குடில்கள் என விதவிதமாக விடுதிகள் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டன. இவற்றில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
ஆனால், நீண்டகால மாக இவை சரிவர பராமரிக்கப்படாததால் அறைகளில் உள்ள பர்னிச்சர்கள், கட்டில், மெத் தைகள், விரிப்புகள், வாஷ் பேசின், கழிப்பறைகள், தண்ணீர் பைப்கள், கதவு கள், ஜன்னல்கள் போன் றவை சிதிலமடைந்து கிடக் கின்றன.
இவற்றில், மெயினருவி குடில்கள் மட்டும் இதில் சற்று விதிவிலக்காக உள்ளது. அங்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் தங்க முடியும் என்ற நிலை உள்ளது.
அதிலும் கலெக்டருக்கு ஒரு அறை, எஸ்பிக்கு ஒரு அறை என ஒதுக்கப்பட்டு, பெரும் பாலும் அவை பூட்டியே கிடக்கிறது.
இதர அறைகளில் மட்டும் சுறறுலா பயணிகள்
தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால், நடுத்தர மக் கள் அதிக வாடகை கொடுத்து தனியார் விடுதிகளில் சிறிய அறைகளில் தங்க வேண்டிய நிலை உள் ளது. இதனாலேயே குற்றாலத்தில் வீடுகள் எல்லாம் விடுதிகளாக செயல்படுகின்றன.

சுற்றுலாத்துறையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றாலத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளவே இல்லை. போதிய நிதியும் ஒதுக்கவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பேரூராட்சி தங் கும் விடுதிகள் பாழடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளது. பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, அரசின் கவனத்துக்கு இதை கொண்டு சென்று, விடுதிகளை புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் எனவும், இதன்மூலம் பேரூராட்சிக் கும் கணிசமான வருவாய் கிடைக்கும் எனவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment