Thursday 27 June 2013

செங்கோட்டை ரயில் நிலையத்தை சுற்றிலும் புதர்க்காடுகள் விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் மக்கள் பீதி
            
     செங்கோட்டை, : செங்கோட்டை ரயில் நிலையத்தை சுற்றி வளர்ந்துள்ள புதர்களால் விஷ ஜந்துக்களின் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக பயணி கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
தமிழக & கேரள எல்லை யில் அமைந்துள்ளது செங்கோட்டை ரயில் நிலையம். நாள்தோறும் இங்கிருந்து சென்னைக்கு பொதிகை விரைவு ரயிலும், மதுரைக்கு 3 முறை, நெல்லைக்கு இருமுறை என பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்பகுதியில் குற்றால சீசன் களை கட்டியுள்ளதால் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
 இந்நிலையில், ரயில் நிலையத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்காடாக காட்சியளிக்கிறது. இவற்றில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையத்தை சுற்றி வளர்ந்துள்ள புதர்களை அகற்றி பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ரயில் நிலை யத்தை சுற்றி ஏராளமான ரயில்வே தொழிலாளர்களின் குடியிருப்பும் உள் ளது. அதனை சுற்றி ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்துள்ள செடி, கொடிளுக்குள் எலிகள் மற்றும் பாம்புகள் அதிக அளவில் பதுங்கியிருப்பதாக ஊழியர்களின் குடும்பத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையத்தை சுற்றியும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் முளைத்துள்ள புதர்களை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment