Saturday 22 June 2013

நெய்வேலி நிறுவன பங்கு விற்பனைக்கு பாரதீய மஸ்தூர் சங்கம் கண்டனம்


22 June 2013 
நெய்வேலி நிறுவனத்தின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை  செய்யும் அரசின் முடிவுக்கு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் அகிலபாரத செயலாளர் எஸ்.துரைராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 10 ஆண்டுகளாக அதிக லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்வதை நாட்டின் மிகப் பெரும் தொழிற்சங்கமாகிய பாரதீய மஸ்தூர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அந்நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் பல ஆயிரம் கோடிகளில் விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும்போது, பங்குகளை விற்று என்.பி..வில் முதலீடு செய்வது, பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பாகும் என்று கூறியுள்ளார். இதனை மத்திய அரசு உடனே கைவிடாவிட்டால், என்.எல்.சி. மஸ்தூர் சங்கம் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து கடுமையான போராட்டங்களையும் நடத்திட தயங்காது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment