நெல்லை, ஜூன். 12-
தென்காசி அருகே உள்ள
நயினாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது
19). இவர் ஐஸ்
வியாபாரம் செய்து
வந்தார். நேற்று
இவர் ஐஸ்களை
'பிரீசர் பாக்ஸ்'-ல் வைத்து
குளிரூட்டினார்.
சிறிது நேரம் கழித்து
பிரீசர் பாக்சை
திறந்தபோது எதிர்பாராதவிதமாக முத்துகுமார்
மீது மின்சாரம்
தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துகுமார்
பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment